-

30 நவ., 2025

தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை

www.pungudutivuswiss.com
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது. 

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

www.pungudutivuswiss.comவிபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம் ​

www.pungudutivuswiss.com

​வெத்திலைகேனி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை கடற்படை வீரர்கள், வெள்ள

யாழில். பட்டப்பகலில் வீதியில் ஓட ஓட இளைஞனை வெட்டிக் கொன்ற வன்முறை கும்பல்

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை 

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு

www.pungudutivuswiss.com
மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்

www.pungudutivuswiss.com
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பாரிய 

29 நவ., 2025

இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

www.pungudutivuswiss.com

கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு பாரிய நிலச்சரிவு.. 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம் - 800 குடும்பங்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பாரிய வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - தொடரும் மீட்பு பணிகள்

www.pungudutivuswiss.comரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார

28 நவ., 2025

www.pungudutivuswiss.comநாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக களனி கங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு களனி கங்கையில் பதிவான மிக மோசமான வெள்ளப்பெருக்கு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மக்களுக்கு 

------------------------------------
சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்  இப்போதைய காலநிலை அனர்த்ததால்  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படும் பட்ஷத்தில் உடனடி அவசர  உணவு தேவை பூர்த்தியை வழங்க விரும்புகின்றது .பிரதேச சபை உறுப்பினர் நாவலன் அல்லது குணாளன்  ஊடாக தொடர்பு கொள்ளலாம் 
www.pungudutivuswiss.com
புங்குடுதீவு  குறிகாட்டுவான்  செல்லும் பாலம்  உடைப்பு . நயினாதீவு நெடும்தீவுதொடர்புகள் பயணங்கள்  துண்டிப்பு  குறிகாட்டுவான்  துறைமுகத்துக்கு  செல்லும் வீதியில் நடுவுதுருத்தியில் அமைந்துள்ள பாலம்  உடைந்துள்ளது  வாகனகள்  செல்லமுடியாதுள்ளது . இதனால் நெடும்தீவு நயினாதீவு  பயணங்கள் பெரும்பாலும் 1  வாரத்துக்கு  தடையாகும் 
www.pungudutivuswiss.comவடக்கை முழுமையாக நோக்கி நகரும் வரலாற்றில் முதல் தடவை.. நாகமுத்து பிரதிபராஜா
டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தற்போது மட்டக்களப்புக்கும் அமபாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும். தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது. ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை.
இந்த புயலின் மையம், மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் 02.12. 2025 அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும். ஆனால் அது நிலையானதல்ல.
இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் 29.11.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறை க்கு நாளை பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் எதிர்வரும் 30.11.2025 வரை மழை கிடைக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆனால் திரு கோணமலை மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.
வவுனியா மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01.12.2025 அன்றும் வவுனியாவின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01 மற்றும் 02.12.2025 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலைமைகளின் படி மன்னார் மாவட்டத்துக்கு நாளை முதல் எதிர்வரும் 01.12.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு அனுராதபுரத்தில்ஸகிடைக்கும் கனமழையும் குளங்களின் வான் பாயும் நீரும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி அருவியாற்றின் முகத்துவாரம் மற்றும் கீழ் நீரேந்து பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் படிப்படியாக இன்று இரவு முதல் கனமழை முதல் மிகக்கனமழையை எதிர்கொள்ளும். இது எதிர்வரும் 02.12.2025 வரை தொடரும்.
குறிப்பு: இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.
தற்போது திருகோணமலை மற்றும் வடக்கு மாகாணத்தில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இது நாளை இன்னமும் அதிகரிக்கும்.
நாளையும் தென், ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும். ஆனால் நாளை மறுநாள் பிற்பகல் முதல் மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும். ஆனால்
எதிர்வரும் 30.11.2025 முதல் மேல மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் மழை குறைவடையும்.
இந்த புயலின் நகர்வுப்பாதை இதுவரை இல்லாதது போன்று அமையும் என தோன்றுகின்றது. இது அசாதாரணமானது. வட மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நகர்வு முற்றிலும் புதியது. 1867ம் ஆண்டு இலங்கையில் முதல் முதலாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் விஞ்ஞான முறைகளிலான வானிலை அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற நகர்வுப் பாதையை எந்த புயலோ, தாழமுக்கமோ கொண்டிருந்ததில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறை.
பகல் 11  மணி (Srilanka)குறிகட்டுவான் இறங்குதுறைக்கும் முனையப்புலம் இந்துமயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலம் தற்சமயம் உடைந்து காணப்படுகிறது மோட்டார் சைக்கிள் தவிர்ந்த எந்த வாகனங்களும் செல்லவேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏🙏.புங்குடுதீவில் தற்போது பலத்த காற்றுடன்  மழை  பெய்கிறது புயல் காற்றினால்  வீடுகளின் கூரைகளின்  ஊடே  நீர்  கசிவதால்  வீடுகள்  முழுமையான ஈரம்  சமைக்க முடியாமல் மக்கள்  தவிக்கிறார்கள் 
கேரதீவு குறிகாட்டுனான் நடுவுதுருத்தி நுணுக்கள் சங்கத்தங்கேணி கழுதைப்பிட்டி வல்லன்  மடத்துவெளி  கிழக்கு பகுதிகளில் வெள்ளம் குளங்கள் நிரம்பி வழிகின்றன துருசுகளின்  மேலால் நீர்  பாய்கின்றன .  நெல்வயல்கள்  முற்றாக  மூடப்பட்டுள்ளன 
எச்சரிக்கை 
சகலவிதமான  பயணங்களையும் தவிருங்கள் வீட்டிலேயே  இருங்கள் உங்கள் வீடு ஆறு குளம் கடற்கரைகளில் இருக்குமானால் வேறு கோயில்கள் பாடசாலைகள்  உறவினர்   வீடுகளுக்கு சென்று  விடுங்கள் சிறுவர்களை கவனமாக  பராமரியுங்கள் .வீட்டு  கூரை   சீட்  மின்கம்பிகள்  என்பவற்றில் கவனம்  செலுத்துங்கள் (ஈரத்துடன்) மின்தொடுப்புகளில்  வயர்களில் காய்  வைக்காதீர்கள் 

பாரிய வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை - பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம்

www.pungudutivuswiss.com
நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் 
பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம்

56 பேர் பலி - மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இடர்காப்பு 

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com#BreakingNews
அதிகம் பகிருங்கள் பயனடைவோரை சென்றடையட்டும்..
யாழ்-கண்டி நெடுஞ்சாலை திடீரென்று மூடப்பட்டதன் காரணமாக தென் பகுதிக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் தென்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்கள் நடுவழியில் அவதியுறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில் கொழும்பு நோக்கி செல்லும் பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதம் மூலம் பயணத்தை தொடரலாம் என்று ஓமந்தை புகையிரத நிலையம் அறிவித்துள்ளது. தற்போது பல பயணிகள் ஓமந்தை புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சிக்கு விரைவில் பதில்! [Tuesday 2025-11-25 19:00]

www.pungudutivuswiss.com


தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும், அதற்குரிய பதிலை விரைவில் அனுப்பி வைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன.

தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும், அதற்குரிய பதிலை விரைவில் அனுப்பி வைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன

ad

ad