-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

30 நவ., 2025

தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை

www.pungudutivuswiss.com
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, காணாமல் போனோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. 

இதன்படி, கண்டியில் 88 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  150 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளையில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர்.

நுவரெலியாவில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 64 பேர் காணாமல் போயுள்ளனர்.

குருநாகல் பகுதியில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.மாத்தளை பகுதியில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேகலை பகுதியில், 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், மொனராகலை, கொழும்பு, மட்டக்களப்பு, அநுரதாபுரம், முல்லைத்தீவு, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, காலி, கம்பஹா, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.  

புதிய இணைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ad

ad