-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

29 நவ., 2025

பாரிய வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - தொடரும் மீட்பு பணிகள்

www.pungudutivuswiss.comரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார்.

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீட்பு நடவடிக்கை

இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

பாரிய வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - தொடரும் மீட்பு பணிகள் | Sri Lanka Bad Weather Affect People

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ​​ஓயா அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியது.

பேருந்தில் சிக்கியிருந்த 67 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேரடியாக சென்று காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் ஹெலிகொப்டர்களை அதிகம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad