வெள்ளி, பிப்ரவரி 15, 2013

87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இலங்கை
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.
கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக சாமரி அத்தப்பத்து 52 ஓட்டங்களும், அணித்தலைவி சஷிகலா சிறிவர்த்தன 44 ஓட்டங்களும், இஷானி கௌஷல்யா 43 ஓட்டங்களும், தீபிகா ரசங்கிக்கா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 245 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி 40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஷன்ட்ரே பிறிட்ஸ் 54 ஓட்டங்களும், டேன் வான் நியக்கேர்க் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி சஷிகலா சிறிவர்த்தன 4 விக்கெட்டுக்களையும், சாமனி செனவிரத்ன, ஶ்ரீபாலி வீரக்கொடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.