சனி, மார்ச் 29, 2014


தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலதா
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பதன்கோட் என்ற இடத்தில் 28.3.2014 அன்று  தீவிரவாதிகள் நடத்திய  திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி
வந்த விழுப்புரம் மாவட்டம்,  திருக்கோயிலூர் வட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த  லான்ஸ் நாயக்  அந்தோணி நிர்மல் விஜி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும், தீவிரவாதத்  தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, தீவிரவாதத்  தாக்குதலில் உயிரிழந்த அந்தோணி நிர்மல் விஜி அவர்களின் குடும்பத்திற்கு பத்து  லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.