www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், ஜூன் 26, 2014
ந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுகொலை,  பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.  போக்குவரத்து அதிகம் இருந்த  இடத்தில் இந்தக் கொலை நடந்தும் கூட, ஒருவாரத்திற்கும் மேலாக, கொலையாளிகளைப் பிடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது காவல்துறை.  ’சுரேஷ்குமார், இந்து முன்னணியில் தீவிரமாக செயல்பட்டபோதும், எவரிடமும் அதிர்ந்து கூடப் பேசாதவர். எப்போதும் காவிவேட்டி, வெள்ளை சட்டை, காவித்துண்டு, நெற்றியில் விபூதிப்பட்டை, அதன் நடுவில் சந்தனப்பொட்டு என பக்திமயமாய்க் காட்சியளிப்பார். 2012 டிசம்பர் 6-ந்தேதி நடந்த இந்து முன்னணி பொதுக் கூட்டத்துக்கு இவர்தான் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பொது அமைதியை கெடுப்பது போல் பேசினார்கள் என 2 பேர் மீது வழக்கு போட்ட போலீஸ், இவரின் இயல்பை அறிந்திருந்ததால், இவரை வழக்கில் சேர்க்கவே இல்லை. மெல்லிய தேகம் கொண்டவர். அப்படிப்பட்டவரை எப்படித்தான் துடிக்கத் துடிக்க வெட்டிக்கொல்ல, பாவிகளுக்கு மனம் வந்ததோ?’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியலுக்கு அருகே இருக்கும் கக்கோடு கிராமம்தான் சொந்த ஊர்.  48 வயதாகும் அவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே வேலைதேடி சென்னை வந்து விட்டார். சின்ன வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்ட சுரேஷ்குமார்,  சென்னை வந்தபிறகு, இந்து முன்னணியில ஆர்வமாக  செயல்பட்டதால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவாராக நியமிக்கப்பட்டார். கொரட்டூரில் இருக்கும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில், வேன் டிரைவராக வேலை பார்த்தபடியே, இயக்கப் பணிகளை கவனித்துவந்த அவருக்கு,  புவனா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைளும் இருக்கிறார்கள். தினசரி, மாலை அம்பத்தூர் எம்.டி ஹெச். சாலையில் இருக்கும் தனது இந்து முன்னணி அலுவலகத் துக்கு வந்துவிடுவார். அப்படி 18-ந் தேதி வந்தவரைத்தான் மர்ம நபர்கள் படுகொடூரமாகப் பொலிபோட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?

மணி இரவு 9.40. அந்த நேரத்திலும் அந்த எம்.டி.ஹெச்.சாலை, பிஸியாகவே இருந்தது. சுரேஷின் இந்து முன்னணி அலுவலகத்தையொட்டி நான்கைந்து கடைகள். அந்த கடைகளின் பக்கவாட்டுச் சாலையில்தான் அம்பத்தூர் காவல்துறை ஜே.சி.அலுவலகம் இருக்கிறது. சம்பவ ஸ்பாட்டி லிருந்து 60 அடி தூரத்தில் ஒரு போலீஸ் பீட் இருக்க, அங்கே இருந்த ஒரு டிராபிக் ஏட்டு, வாகனங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். 

சுரேஷ்குமாரோ நான்கைந்து கடைகள் தள்ளியிருக்கும் அந்த மெடிக்கல் ஷாப்புக்குப் போனார். சில நிமிடங்கள் அங்கே பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த மூன்று பேர், சுரேஷின் அலுவலகத்துக்கு எதிரே கிருஷ்ணா பேக்கரி வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு, அவரையே கண்காணித்தபடி இருந்தனர். மெடிக்கலில் இருந்து தன் அலுவலகத்துக்கு நடந்த சுரேஷ்குமாரின் செல்போன் சிணுங்கியது. போனை எடுத்துப் பேசியபடியே அவர் நடக்க, அந்த மூவரும் விறுவிறுவென ரோட்டைக் கிராஸ் செய்து, சுரேஷை நெருங்கினர்.  பிறகு? சம்பவத்தை நேரில் பார்த்தவரும், விபரீதத்தைத் தடுக்கமுயன்று வெட்டு வாங்கியவருமான ஜூஸ் கடை ரவியே சொல்கிறார். ""என் புகைப்படத்தைப் போட்றாதீங்க. நான் என் ஜூஸ் கடையைப் பூட்டும் முயற்சியில் இருந்தேன். என் மைத்துனர் மணி கடைக்குள் இருக்க, அவரிடம் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோடா பாட்டில்களை எடுத்துக் கொடுத்தபடியே இருந்தேன். சுரேஷ் வர்றதையும் அவரை நோக்கி வேகமா மூணுபேர் போறதையும் பார்த்தேன். அதிலொருத்தன் தோளில் கருப்பு பேக்கை மாட்டியிருந்தான். அந்த மூணுபேரும் முதுகுக்குப் பின்னால் இருந்து பட்டாக் கத்தியை மின்னல் வேகத்தில் உருவினர். போனிலேயே கவனமாக இருந்த சுரேஷ் குமாரை சரசரவென கழுத்திலும் வாயிலும் தலையிலும் முகத்திலும் மார்பிலும் வெட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. அவர் சத்தம்போடக் கூட இல்லை. இதைப் பார்த்துப் பதறிய நான், "டேய் டேய் என்ன பண்றீங்கடா' என்றபடி அவனுங்களை நோக்கி ஓடினேன். அப்ப அவனுங்கள்ல ஒருத்தன், என்னை வெட்ட, அதைக் கையால் தடுத்தேன். இடதுகையில் வெட்டுவிழுந்தது. நான் அப்படியே பின்வாங்கி பின் பக்கமாவே மெதுவா நடந்தேன். ஒருசில நொடிகள்ல அவரை அவனுங்க சாச்சிட்டானுங்க.  ரோட்டில் போன யாரும், இந்தக் கொடுமையை கவனிக்கலை. நேரா போலீஸ் பீட்டில் இருந்த ஏட்டுக்கிட்ட ஓடிப்போய் விஷயத்தைச் சொல்லி அவரை அழைச்சிக்கிட்டு வந்தேன். அவனுங்க மறுபடியும் ரோட்டைக் கிராஸ் பண்ணி, நிதானமா பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்புனானுங்க. அவ னுங்க இடது பக்கம் திரும்பினானுங்களா, இல்லை வலது பக்கம் திரும்பி னானுங்களான்னு தெரியலை. என் கண் முன்னாலேயே இப்படி ஒரு கொடூரம் நடந்துடுச்சே''’என்றார் பீதிவிலகாமல்.


வெட்டிய நபர்கள் எப்படி இருந்தார்கள்? என்றோம். ரவியோ ‘""அவர்கள் தாடி வைத்திருக்கலை. குல்லாயும் போட்டிருக்கலை. சிலபேர் முக்கால் பேண்ட் போடுவாங்களே, அப்படியும் போடலை. பாக்க டீசண்டா இருந்தானுங்க. எல்லாருக்குமே 40-லிருந்து 45 வயது இருக்கும்'' என்றார். 

சுரேஷ்குமாரின் நெருங்கிய நண்பரான தியாகராஜனோ ""என் லைனுக்கு வந்த சுரேஷ் குமாரின் தம்பி சதீஷ்குமார்,  அண்ணே, சுரேஷ் அண்ணனை ஆபீஸ் வாசல்லயே வச்சி வெட்டிட் டாங்களாம்னு’ அழுதான்.  சுரேஷ் ஆபீஸுக்கு ஓடினேன்.  சுரேஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.  உடனே அவரை ஆட்டோவில் சுந்தரம் பவுண் டேஷன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம்.  சோதிச்சிப் பார்த்த டாக்டர்கள், உயிர் இல் லைன்னு  உதட்டைப் பிதுக்கிட்டாங்க'' என்றார் கண்ணீரோடு. 

சுரேஷின் மனைவி புவனாவோ அழுத படியே ""எங்களுக்குக் கல்யாணம் ஆகி 13 வருசம் ஆகுது. அவருக்கு பக்தி அதிகம். விநாய சதுர்த்தின்னா எங்கத் தெருவில் பிரமாண்டமான விநாயகரை வச்சி, தினசரி நிகழ்ச்சிகள் நடத்து வார்.  அதேபோல் சிவராத்திரிகள்ல இந்தப் பகுதியில் இருக்கும் 12 சிவன் கோயில்களுக்கும் ஏறத்தாழ முன்னூறு நானூறு பேரோட தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடிக்கிட்டே போவார். எங்கப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையா இருக்காங்க. ஆனா அவங்கக்கிட்ட அவர் எந்த வம்புதும்புக்கும் போனதில்லை. அவரைப்போய் இப்படி பண்ணிட்டாங்களே. ரெண்டு பொம் பளைப் பிள்ளைகளை வச்சிக்கிட்டு, எப்படிக் காலம் தள்ளப்போறேனோ'' என்றார் தலையில் அடித்துக்கொண்டு.

கே.எம்.சி. மருத்துவமனையில் போஸ்மார்ட் டம் முடிந்து, சுரேஷின் உடலை மண்ணூர் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் இருக் கும் அவரது வீட்டை நோக்கி, இந்துத்துவா அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழியில் தென்பட்ட பேருந்துகள், கார்கள் என பலவற்றையும் கல்வீசித் தாக்கியதோடு, வழி நெடுகிலும் தென்பட்ட முஸ்லிம்களின் கடைகள் மீதும் மசூதிகள், சர்ச்சுகள் மீதும் கல்வீசினர். கல் வீச்சுக்கு வசதியாக வழிநெடுகக் கிடக்கும் கற்களை எல்லாம் தங்கள் வாகனங்களில் அள்ளிப்போட்டபடியே வந்தனர். ஊர்வலத்தில் வந்த ஒரு பெண்மணி "விட மாட்டோம். விடமாட்டோம். பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' என ஆவேசமாக கோஷம் போட்ட படியே இருந்தார். அப்போது இந்துத்துவா அமைப்பு பிரமுகர் ஒருவரிடம் ’நிலைமை மோசமாகப் போகிறதே’ என்ற நம் கவலையைத் தெரிவித்தோம். அவரோ ‘""கட்சியை வளர்க்க எங்களுக்கு இதைவிட வாய்ப்பு இல்லை. அவங்களுக்கு ஒரு சின்ன பிரச் சினைன்னாலோ, சினிமாவில் அவங்களுக்கு எதிரான ஒரு காட்சி வந்தாலோ, அண்ணாசாலையையே மறிச்சிடறாங்களே. இது உயிர்ப்பிரச்சினை. அப்படிதான் கோபம் எதிரொலிக்கும்'' என்றார் காரமாக.

சுரேஷ்குமார் வீடு இருக்கும் பகுதியில் ஊர்வலம் போனபோது, மசூதி இருக்கும் வழியாகச் சுற்றிக்கொண்டு போக ஊர்வலத்தினர் முயன்றனர். அவர்களை போலீஸ் டீம் வழிமறித்தது. ஊர்வலத்தில் வந்த சீனியர் பா.ஜ.க.தலைவர் இல.கணே சன், பா.ஜ.க.மோகன்ராஜுலு போன்றோரை அழைத்து வடசென்னை கூடுதல் கமிஷனர் கருணாசாகர் ,டி.சி.பாலகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தினர் எல்லை மீறமுயல, போலீஸார் தடியடியைத் தொடங்கினர். இதன்பின் ஊர்வலம் உரிய வழியில் சுரேஷ்குமா ரின் வீட்டை அடைந் தது.  

சுரேஷ்குமாரின் உடல் குமரி மாவட்டத் தில் இருக்கும் சொந்த ஊருக்குக் கொண்டு போகப்பட்ட போது, அங் கும் மோதல் வெடித்தது. வில்லுகுறிச்சி அருகே, ஒரு முஸ்லிம் இளைஞரை ஊர்வலத்தினர் தாக்க முயன்றதால், அவரை மீட்டு, குமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜு தன் ஜீப்பில் உட்காரவைத் திருந்தார். ஊர்வலத்தில் போலீஸ் ஜீப்பைத் தாக்கியதோடு, அந்த முஸ்லிம் இளைஞரையும் இன்ஸ்பெக்டர் முத்துராஜையும் தாக்கி னர். இதனால் விரைந்து வந்த அதிரடிப்படையினர், அவர்களைத் துரத்தியடித்ததோடு,  கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள குளுமைக்காடு பகுதியில் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினர். அங்கும் பிரச்சினை வெடிக்க போலீஸ் டீம், கூட்டத்தினர்மீது தடியோடு பாய்ந்து விரட்டி விரட்டி அடித்தது. போலீஸின் இந்த அதிரடிக் குப் பின், ஊர்வலம் அமைதியாக கக்கோடு போய்ச் சேர்ந்தது. அங்கே சுரேஷ்குமாருக்கு இறுதிச் சடங்கு கள் நடந்தன. தமிழக பா.ஜ.க.தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்துக் கேட்டபோது ""இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. சுரேஷ் படுகொலையில் இன்னும் க்ளூ கிடைக்க வில்லை என்று போலீஸ் சொல்கிறது. சிறப்புக் குழுக் கள் அமைத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வேதனை யை ஏற்படுத்துகின்றன'' என்றார் கவலையாய்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருக்கும்போது நடந்த சுரேஷ்குமாரின் படுகொலை, இந்துப் பிர முகர்கள் பலரையும் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.