புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்! 67 சதவிகிதம் பதிவு! கருத்து கணிப்பு தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கடும் குளிர் நிலவியதால், ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி வரை நடந்த தேர்தலில் 67 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. 

வாக்குப்பதிவு முடிந்ததைத்தொடர்ந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. 

பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ராஜ்நாத் சிங் உள்பட பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் கிரண்பேடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடவுள் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த முறையைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை பெறுவோம். 10ஆம் தேதி முடிவை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதுவே தேர்தல் முடிவாக வெளியாகும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

இதனிடையே ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ad

ad