புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லையென தெரிவித்துள்ள  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்து செல்லவில்லை. அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.
கிழக்கு மாகாணசபையில் இவ்வாறான நெருக்கடி நிலையேற்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு காரணமாகும். எமக்கு இருந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன ஒற்றுமை, மனித பண்பு, யாரையும் ஏமாற்றாத தன்மை, நல்லாட்சி அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் பயணித்ததன் காரணமாகவே இந்த நிலைமையேற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தினை பெறுவதற்கான பல வழிமுறைகள் காணப்பட்டன. அனைத்து வழிமுறைகளையும் உரிய முறையில் கையாள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் மனம் தளரவேண்டியதில்லை. இன்னும் காலம் கடந்துசெல்லவில்லை. விரைவில் அதற்கான பதிலை மக்கள் அறிந்துகொள்ளமுடியும் என்றார்.

ad

ad