7 பிப்., 2015

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 4 லட்ச ரூபாயும், ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பதினைந்தும் இருந்தன. இதையடுத்து காரில் வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.