புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

பால் குறிப்பிடப்படாத ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளால் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளத் தடை

பால் குறிப்பிடப்படாத உடைய ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளைக் கனேடியக் கடவுச்சீட்டைப்  பெற்றுக்கொள்ளப்  பயன்படுத்த
முடியாது என்பது தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக முடிவொன்றை எடுப்பதற்கு ஒன்ராரியோ அரசு மத்திய அரசுடன் அவசரப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ஒன்ராயோ சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதோர், கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது தமது அடையாளத்தினை உறுதிப்படுத்த ஒன்ராரியோ சுகாதார அட்டைகளைப் பயன்படுத்த முடியும். ஆயினும் பால் குறிப்பிடப்படாத (gender-neutral )  ஒன்ராரியோ சுகாதார அட்டைகளை கனேடிய கடவுச்சீட்டிற்காகப் பயன்படுத்தமுடியாது என கனேடிய கடவுச்சீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஒன்ராரியோ சுகாதார அட்டைகளை நிர்வகிக்கும் ServiceOntario, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ஒருவரது சகல விபரங்களையும் உள்ளடக்கிய பற்றுச்சீட்டு ஒன்றை ஒன்ராரியோ சுகாதார அட்டைகளுடன் வழங்கமுடியும் என்றும், இப் பற்றுச்சீட்டு வின்ணப்பதாரிகளின் பாலினம் உட்பட சகல விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் ஒன்ராரியோவின் சுகாதார அமைச்சர் Eric Hoskins கூறினார்.
சுகாதார அட்டைகளிற்கான பற்றுச்சீட்டு இல்லாதவர்கள் அவற்றை ServiceOntario இல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறினார்.

பாலின அடையாளத்தை ஒன்ராரியோ மாகாண அரசு தனது சுகாதார அட்டைகளிலிருந்து நீக்கப்போகின்றது என்ற விடயம் மத்திய  அரசிற்கு அறிவிக்கப்பட்டதா என்பது பற்றி அமைச்சர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.பால் குறிப்பிடப்படாத ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளால் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளத் தடை

ad

ad