புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2019

ஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன

பல சர்ச்சைகள் பின் ஜெர்மனி பல வீரர்களை இணைத்து ஒல்லாந்துடன் ஆடி 3-2 என்ற ரீதியில் வென்றுள்ளது

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து, சுவீடன், அயர்லாந்துக் குடியரசு உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

தமது நாட்டில் நேற்று இடம்பெற்ற நோர்வேயுடனான போட்டியில் ஸ்பெய்ன் வென்றிருந்தது. இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரான ஜோர்டி அல்பாவிடமிருந்து பெற்ற பந்தை ஸ்பெய்னின் முன்கள வீரர் ஜோர்டி அல்பா கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நோர்வேயின் முன்கள வீரர் பியொன் ஜோன்சனை, ஸ்பெய்னின் பின்களவீரர் இனிகோ மார்ட்டின் வீழ்த்தியதைத் தொடர்ந்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை நோர்வேயின் இன்ன்னொரு முன்களவீரரான ஜோஷுவா கிங் கோலாக்க, அவ்வணி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

அந்தவகையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில், நோர்வேயின் கோல் காப்பாளர் ருனே ஜர்செய்னால் ஸ்ப்யெனின் முன்கள வீரர் அல்வரோ மொராட்ட்டா வீழ்த்தப்பட்டநிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை ஸ்பெய்னின் அணித்தலைவரும், பின்கள வீரருமான சேர்ஜியோ றாமோஸ் கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.

இப்போட்டியில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நேரம் ஸ்பெய்னே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், கோல் கம்பத்தை நோக்கி 26 உதைகளைக் கொண்டிருந்தபோதும், பல கோல் பெறும் வாய்ப்புகளை அல்வரோ மொராட்டா தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற பின்லாந்துடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றிருந்தது. இத்தாலி சார்பாக, நிகொலோ பரெல்லா, மொய்ஸே கான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஜோர்ஜியாவில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றிருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, ஸ்டீவன் ஸுபர், டெனிஸ் ஸகரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற றோமானியாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் வென்றிருந்தது. சுவீடன் சார்பாக, றொபின் குவைஸன், விக்டர் கிளாசென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றோமானியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிளெடி கசரு பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜிப்ரோல்டரில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்துக் குடியரசு வென்றிருந்தது. அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெஃப் ஹென்ட்றிக் பெற்றிருந்தார்.ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து, சுவீடன், அயர்லாந்துக் குடியரசு உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

தமது நாட்டில் நேற்று இடம்பெற்ற நோர்வேயுடனான போட்டியில் ஸ்பெய்ன் வென்றிருந்தது. இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரான ஜோர்டி அல்பாவிடமிருந்து பெற்ற பந்தை ஸ்பெய்னின் முன்கள வீரர் ஜோர்டி அல்பா கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நோர்வேயின் முன்கள வீரர் பியொன் ஜோன்சனை, ஸ்பெய்னின் பின்களவீரர் இனிகோ மார்ட்டின் வீழ்த்தியதைத் தொடர்ந்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை நோர்வேயின் இன்ன்னொரு முன்களவீரரான ஜோஷுவா கிங் கோலாக்க, அவ்வணி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

அந்தவகையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில், நோர்வேயின் கோல் காப்பாளர் ருனே ஜர்செய்னால் ஸ்ப்யெனின் முன்கள வீரர் அல்வரோ மொராட்ட்டா வீழ்த்தப்பட்டநிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை ஸ்பெய்னின் அணித்தலைவரும், பின்கள வீரருமான சேர்ஜியோ றாமோஸ் கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.

இப்போட்டியில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நேரம் ஸ்பெய்னே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், கோல் கம்பத்தை நோக்கி 26 உதைகளைக் கொண்டிருந்தபோதும், பல கோல் பெறும் வாய்ப்புகளை அல்வரோ மொராட்டா தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற பின்லாந்துடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றிருந்தது. இத்தாலி சார்பாக, நிகொலோ பரெல்லா, மொய்ஸே கான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஜோர்ஜியாவில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றிருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, ஸ்டீவன் ஸுபர், டெனிஸ் ஸகரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற றோமானியாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் வென்றிருந்தது. சுவீடன் சார்பாக, றொபின் குவைஸன், விக்டர் கிளாசென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றோமானியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிளெடி கசரு பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜிப்ரோல்டரில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்துக் குடியரசு வென்றிருந்தது. அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெஃப் ஹென்ட்றிக் பெற்றிருந்தார்.

ad

ad