புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

 
‎11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.

10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.

பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்) Yarlton (2011 ல் 3ம் இடம்), Bharathy, Senthamil, Uthayasooriyan ஆகிய கழகங்களும், இத்தாலியிலிருந்து Eelamannarkal, Selected Team ஆகிய அணிகளும், ஜேர்மனியிலிருந்து South Germany அணியும், நெதர்லாந்திலிருந்து Selected Team அணியும், நோர்வேயிலிருந்து Stovner அணியும் கலந்து கொண்டன. கால் இறுதிப் போட்டிகளில் முறையே Royalஅணியினர் Swissboysஅணியினரையும் , Yarlton அணியினர் Uthayasooriyan அணியினரையும், Bluestar அணியினர் Stovner அணியினரையும், Youngstar அணியினர் Bharathy அணியினரையும் தோற்கடித்து அரை இறுதிக்கு தெரிவாகினர்.

2011 ல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டிகளில் சுவிஸிலிருந்து எந்த அணிகளும் தகுதி பெறவில்லை. 2012 ல் 3 அணிகள் தெரிவாகியமை பாராட்டப்பட வேண்டிய விடயமே.

முதலாவது, அரை இறுதிப்போட்டி Youngstar, Royal அணிகளிற்கிடையே நடைபெற்றது. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகவே நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவுற்றதால் மேலதிக நேரம்

வழங்கப்பட்டது. மேலதிக நேரத்திலும் சமநிலையில் முடிவுற்றது. ஈற்றில் பனால்டி உதையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. Youngstar அணியினர் 4 - 3 என்ற ரீதியில் Royal அணியினரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.

மற்றைய போட்டியில் Yarlton, Bluestar ஆகிய அணிகள் கலந்து கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் Yarlton அணியினர் 2 - 0 என்ற ரீதியில் Bluestar அணியினரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.

இறுதிப்போட்டி Yarlton (France), Youngstar (Lyss) அணிகளிற்கிடையே நடைபெற்றது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் சிறப்பாகவே ஆட ஆரம்பித்தனர். Yarlton அணியினர் 1 - 0 என்ற ரீதியில் முன்னிலையில் திகழ்ந்தனர். Youngstar அணியினரும் போட்டியில் சமநிலையை அடைய தம்மால் முடிந்தவரை ஆடினர். போட்டி முடிவடையும் நேரத்தில் கிடைக்கப்பெற்ற Corner Kick ல் Pradeesh கோலொன்றைப் போட்டு போட்டியை சமனாக்கினர். மேலதிக நேரம் வழங்கப்பட்டு 5 நிமிடம் முடிவுற்ற போது மைதான பொறுப்பாளர்களினால் மைதான வெளிச்சம் அணைக்கப்பட்டது.

இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டு இரு அணிகளின் ஒப்புதலுடன் 12.08.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் ஆடுவது என தீர்மானிக்கப்பட்டது. 12.08.2012 ல் நடைபெற்ற இறுதியாட்டமும் சிறப்பாகவே அமைந்தது. இரு அணிகளும் மிகவும் சிறப்பாகவே ஆடினார்கள். போட்டி சமநிலையில் முடிவுற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டபோதும் சமநிலையில் முடிவுற்றதால் பனால்டி உதையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

Youngstar அணியின் கோல்காப்பாளர் தர்மின் Yarlton அணியின் பனால்டி உதையை தடுத்ததன் மூலம் Youngstar அணியினர் 3 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்று தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கினர்.

Youngstar அணியின் கோல்காப்பாளர் தர்மினின் சிறப்பாட்டத்தின் மூலமே இவர்கள் இக்கிண்ணத்தை பெறமுடிந்தது.







போட்டி முடிவுகள்



1) Young Star - Lyss

2) Yarlton - France

3) Blue Star - Lausanne

4) Royal - Bern





சிறந்த வீரர்: Sabi (Young Star - Lyss)

சிறந்த கோல் காப்பாளர்: Niru (Yarlton)

ஆட்ட நாயகன்: Tharmin (Young Star - Lyss)

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முடிவுகள்
09-வயதுப்பிரிவு
1ம்-இடம் : OSKA SC - CH
2ம்-இடம் : ILAM SIRUTHAIKAL SC - CH
3ம்-இடம் : BLUESTAR SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Gunaratnam ACSHAYAN [ ILAM SIRUTHAIKAL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Ravikumar Gowsikan [ OSKA SC ]

11-வயதுப்பிரிவு
1ம்-இடம் : TAMILYOUTH SC
2ம்-இடம் : OSKA SC
3ம்-இடம் : BLUESTAR SC
சிறந்த விளையாட்டு வீரர் : Mhatheenan Kanapathipillai [ TAMILYOUT SC]
சிறந்த பந்துக் காப்பாளர் : Eneamarturt [ TAMILYOUTH SC ]

13-வயதுப்பிரிவு
1ம்-இடம் : ILAM THAMIL SC - FR
2ம்-இடம் : CITYBOYS SC - CH
3ம்-இடம் : OSKA SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Uthayasuthan Senthooran [ ILAM THAMIL SC - FR]
சிறந்த பந்துக் காப்பாளர் : Anantharajah Nirojan [ ILAM THAMIL SC - FR]

15-வயதுப்பிரிவு
1ம்-இடம் : VAANAVIL SC - CH
2ம்-இடம் : YOUNGSTAR SC - CH
3ம்-இடம் : THAIMAN SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Jeyaseelan Anuchan [ VAANAVIL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Santhakumar Nagargi [ VAANAVIL SC ]

17-வயதுப்பிரிவு
1ம்-இடம் : VAANAVIL SC - CH
2ம்-இடம் : ILAMTHAMIL SC - FR
3ம்-இடம் : SUNRISE SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : NICK KURTH [ VAANAVIL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Kerin Eschler [ VAANAVIL SC ]

21-வயதுப்பிரிவு
1ம்-இடம் : FRANCE SELECTED
2ம்-இடம் : SWISSBOYS SC - FR
3ம்-இடம் : ILAM SIRUTHAIKAL - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Bravin [ SWISSBOYS SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : - [ FRANCE SELECTED]
சிறந்த ஆட்ட நாயகன் : - [ FRANCE SELECTED]

வளர்ந்தோர்-பிரிவு
1ம்-இடம் : YOUNGSTAR SC - CH
2ம்-இடம் : YARLTON SC - FR
3ம்-இடம் : BLUESTAR SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Sabi [ YOUNGSTAR SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Niru [ YARLTON SC ]
சிறந்த ஆட்ட நாயகன் : V.Tharmin [ YOUNGSTAR SC ]

35-வயதுப்பிரிவு
1ம்-இடம் : CITYBOYS SC - CH
2ம்-இடம் : OLDBOYS SC - CH
3ம்-இடம் : St.MARYS SC - FR
சிறந்த விளையாட்டு வீரர் : Thevan [ CITYBOYS SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Easan [ CITYBOYS SC ]

பெண்கள் பிரிவு சிநேகபூர்வ ஆட்டம்
1ம்-இடம் YOUNGSTAR SC - CH
2ம்-இடம் THAIMAN SC-CH

ad

ad