புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை- (செய்தித் துளிகள்)
பணச்சலவை மற்றும் நிதி சேகரிப்பு குறித்த சட்டங்களை சீர்த்திருத்தம் செய்யவிருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வழங்குதல், மற்றும் வெளிநாட்டு நிதிகளை இலங்கையில் பணச்சலவை செய்தல் போன்ற விடயங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான சீர்த்திருத்தங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்துடன் கலந்துரையாடல்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போது, சம்பள உயர்வு குறித்த இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு அதிகளவான சாத்தியக் கூறுகள் இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 4 ஆம் திகதி பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிநிறுத்தப் போராட்டம் இன்னமும் இடம்பெற்று வருகின்றது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து விரிவுரையாளர்கள் பணிநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதேவகையில், தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரி கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இந்த வாரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர்.
இவ்வாறிருக்கையில், மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுமாறு உயர்கல்வி அமைச்சு அறிவித்தது.
தனியார் பஸ் ஊழியர்களுக்கான காப்புறுதி நிராகரிப்பு
இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தனியார் பஸ் ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி நடைமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளன செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தமது நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த காப்புறுதி திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக அவர் கூறினார்.
இதன்காரணமாக, புதிதாக காப்புறுதி நடைமுறை ஒன்று அவசியம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்த்தனவை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், இந்த காப்புறுதி நடைமுறை பஸ் சேவையாளர்களின் குடும்ப உறுப்பினருக்கும் கிடைக்கபெறும் என குறிப்பிட்டார்.

ad

ad