புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012



டெசோ தீர்மானம்: மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்படும்: கலைஞர்
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஒற்றுமை மூலம்தான் அதனை சாதிக்க முடியும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். டேசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா. மன்றத்திற்கு
அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூதிரல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
ஈழத் தமிழர்களின் அவல நிலை மாற, அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் தற்போது டெசோ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை நல்ல உள்ளம் கொண்ட தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஒரு நோக்கத்திற்காக போராடும்போது ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே இலக்கை அடைய முடியும். ஈழத்தில் ஏற்பட்ட பின்னடைவிற்கு ஒற்றுமையின்மையே காரணம். 

மத்திய அரசு அனுமதிகொடுத்துவிட்ட டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க கடைசி வரை அதிமுக அரசு முயற்சித்தது. நீதிமன்ற ஆணைப்படி அந்த மாநாடு நடத்தப்பட்டது. ஜெயலலிதாவிற்கு துதிபாடும் சில தலைவர்கள் டெசோ மாநாட்டால் பயன் இல்லை என்று கூறிவந்தாலும், டெசோ மாநாட்டின் இலக்கு சரியான திசையில் செல்கிறது.
பிரதமரிடமும், சோனியாவிடம் கொடுத்த டெசோ மாநாட்டின் தீர்மானங்கள், ஐ.நா.மன்றத்திடம் வழங்கப்படும். அந்த தீர்மானம் டி.ஆர்.பாலு மூலமாகவும், மு.க.ஸ்டாலின் மூலமாகவும் வழங்கப்படும். 

ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றார்.

ad

ad