புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்
வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் பெருந்தொகையான தங்கநகைகளை கொண்டுசென்று அடகுவைத்து பணம் பெற்றுள்ளமை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தங்க ஆபரணங்களை சந்தேகநபரான பிரசான் கொட்டகலை ராணியப்பு தோடத்தில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிலிருந்து எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார்.
அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வாகனங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.
தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார்.
நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

ad

ad