புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

தமிழகத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
 
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தின் ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில்,
இலங்கை ராணுவ வீரர்கள் இரண்டு பேருக்கு ஊட்டி இராணுவ பயிற்சி மையத்தில் கடந்த மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இலங்கை இராணுவ வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பெங்களூர் பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
எங்களது கோரிக்கையே, இலங்கை வீரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்பதுதான்.
ஆனால் தற்போது, கடந்த 4 மாதங்களாக ஊட்டியில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் திசநாயக்க, மேஜர் ஹேவாவாசம் ஆகியோருக்கு கடந்த 4 மாத காலமாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதாக உள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது. உடனடியாக இலங்கை இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை நிறுத்துமாறு பிரதமர், இராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை, மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கடிதத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

ad

ad