புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


உயிரிழப்புகளை சந்தித்த எம்மினம் உரிமைக்கான குரலை இழந்திருக்குமென அரசு தப்புக்கணக்குப் போடுகிறது: சித்தார்த்தன்
உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த எமது இனம், உணர்வுகளையும் உரிமைகளுக்கான குரலையும் இழந்திருக்கும் என்று அரசு தப்புக்கணக்குப் போடுகிறது. இந்த அரசுக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்கி சர்வதேசத்திற்கும் எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக காண்பிக்க வேண்டும் என புளோட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் த. மனோகரராசா (செல்வா)வை ஆதரித்து, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரசாரக் கூட்டத்தில்,புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் த.மனோகரராசா (செல்வா), மட்டக்களப்பு மாநரசபை எதிர்க்கட்சித் தலைவர் பெனடிக்ற் தனபாலசிங்கம், களுவாஞ்சிகுடி பிரதேசபை எதிர்க்கட்சித் தலைவர் பகீரதன், வவுணதீவு பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் விமலன், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் கேசவன் மற்றும் ஆதரவாளர்களும் பலர் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், மனித உரிமை மீறல் உட்பட்ட பல விடயங்களில் சர்வதேசமும் ஐ.நா.வும் இலங்கை அரசுக்கு நெருக்குவாரங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் தனக்கே ஆதரவாக இருக்கிறார்கள். இங்கே எந்தவொரு பிரச்சனைகளும் இல்லையென காட்டுவதற்காகவே குறித்த காலத்திற்கு முன்னதாகவே கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தலை நடாத்தி ஆளுங்கட்சி வெற்றியீட்டிக் காட்ட கங்கணம் கட்டி நிற்கிறது.
இதனை புரிந்துகொள்ளாதிருக்க தமிழர்கள் ஏமாளிகள் அல்லர். இத்தனை உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த எமது இனம் உணர்வுகளையும் உரிமைகளுக்கான குரலையும் இழந்திருக்கும் என்று அரசு தப்புக்கணக்குப் போடுகிறது.
இந்த அரசுக்கு சரியான பாடத்தை மக்களாகிய நீங்களே வழங்கி சர்வதேசத்திற்கும் எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ad

ad