புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரண தண்டணை
ஐக்கிய தேசியக் கட்சயின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் கொலை சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மரணதண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முற்பகல் 9:00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.
ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.
இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர்.
மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில், இதுவரை காலமும் மகேஸ்வரன் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad