புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.

 திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியபோது,

 ’’ஈழத் தமிழர்கள் வாழ்வுக்காக டெசோ மாநாடு நடத்தப்பட்டது. இங்குள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. ஈழத் தமிழர்களை சிங்களர்கள் வீழ்த்தியதாலும் அமைதி வழிப் போராட்டத்தில் பலன் இல்லாமல் போனதாலும் விடுதலை இயக்கங்கள் தீவிரவாதத்திலும் போரிலும் ஈடுபட்டன.
 ஈழத் தமிழர் போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு, சகோதர யுத்தத்தில் ஈடுபடாதீர்கள் என கருணாநிதி கூறினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமைதி வழியில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


 அந்த சமயத்தில் சென்னையில் ஈழ போராட்டக் குழுத் தலைவரை பிரபாகரன் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இதன் விளைவாக ஈழத் தமிழருக்கான பயன்தரும் அமைதித் திட்டம் தடுமாறிப் போனது. மேலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வைகோ கள்ளத்தோணி மூலமாகச் சென்று பிரபாகரனை சந்தித்தார்.

 ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதித் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு. இப்போது, டெசோ மாநாடு எதற்கு எனக் கேட்கின்றனர்.
 ஈழத் தமிழர்கள் மனித உரிமை அடிப்படையில் வாழ முடியவில்லை என்று ஐ.நா. சபையின் மனித உரிமை பாதுகாப்புக் குழு அதை கையில் எடுத்துள்ளது. இத்தகைய தருணத்தில் ஈழத் தமிழர்களுக்கு மேலும் நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. டெசோ மாநாட்டு தீர்மானம் ஐ.நா. சபைக்கு எட்டும்’’ என்றார்.

ad

ad