புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012



மதுரை ஆதீனம் உடல் நிலை மோசம் ; சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க
விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்


மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அறிவித்தார்.   அதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.   சர்ச்சைகளுக்கெல்லாம் இணைந்து விளக்கம் கொடுது வந்த, நித்தியும், அருணகிரி இருவருக்குமே தற்போது பிரச்சனை என்று கூறப்படுகிறது. 
கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தாவின் அழைப்பின் பேரில்,  அருணகிரிநாதர் கொடைக்கானலுக்கு சென்றார்.  அங்கு சென்று நித்தியை சந்தித்துவிட்டு மதுரைக்கு திரும்பியது முதலே, அருணகிரி பெரும் குழப்பத்தில் இருந்து வந்தார் என்றும்,  அதனாலேயே கடந்த இரண்டு தினங்களாக சரிவர உணவருந்தாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதீனம் அருணகிரிநாதருக்கு இன்று (27.8.2012) மதியம் உடல் நிலைமிகவும் மோசமாகியது.  மடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை  ராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து அவர் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.  இன்றுஇரவு 9 மணிக்கு மதுரயில் இருந்து புறப்படும் விமானம் மூலம் சென்னை வருகிறார்.  இரவு 11 மணிக்கு அவர் சென்னையில் உள்ள  போரூர் ராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ad

ad