புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


மட்டு. போதனா வைத்தியசாலை குளியலறைகளில் இஸ்லாமியச் சின்னங்கள்: முஸ்லிம்கள் கவலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குளியலறைகள் பலவற்றில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட தரையோடுகள் பொருத்தப்பட்டமை குறித்து அப்பிரதேச முஸ்லம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
'அல்லா பிஸ்மி' என அரபு எழுத்துக்களில் எழுதப்பட்ட சமய சின்னங்களைக் கொண்ட தரையோடுக் காணப்பட்டதாக மட்டக்களப்பிலுள்ள இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி சங்கத்தின் தலைவரான மொஹமட் கலீல் தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதோடு, அதனை அகற்றுவதற்கு 1000 தரையோடுகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்ய தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
சீன ஒப்பந்தக்காரர் ஒருவர் இந்த தரையோடுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் எவரும் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை எனவும் மொஹமட் கலீல் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தன் தெரிவிக்கையில்,
7 வருடங்களுக்கு மேல் இத்தரையோடுகள் அங்கிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  முஸ்லிம் மதகுரு ஒருவர் இவ்விடயத்தை எமது கவனத்துக்கு கொண்டுவந்தார். அவற்றை அகற்றுவதற்கு நாம் தயாரென தெரிவித்துள்ளோம். ஆனால் அவற்றை ஒரே இரவில் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ad

ad