புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


ஆண்டுதோறும் பில்லாக் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம் முறையினை மாற்றி கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் இதுவரை எல்லோரும் செலுத்தி வந்த ஒலிபரப்பு உரிமக் கட்டணத்துக்குப் பதிலாக கூடுதல் மதிப்பு வரியை வசூலிக்க வேண்டும் என்று ஸ்டீபன் மேயர்ஹான்ஸ்(Stefan Meierhans) தெரிவித்துள்ளார்.
தற்போது மற்ற பொருளுக்கு எட்டு சதவீதம் "வாட்" வரி விதிக்கப்படுவதும், ஒலிபரப்புக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதும் சரியாக இருக்கும் என செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் பில்லாக் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம் முறையினை மாற்றி கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்தக் கட்டணத்தை மக்கள் தங்கள் வீடுகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் செலுத்தியாக வேண்டும். ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று மக்கள் மடிக்கணனி, திறன்மிகு அலைபேசி மற்றும் வேறு பல மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதால் எல்லோரும் இதற்கான கட்டணத்தைச் செலுத்துவது சரியே என்றார் மேயர் ஹான்ஸ்.
இந்தக் கட்டணம் ஏறத்தாழ, ஒரு வரி விதிப்பைப் போன்றது தான். ஆனால் ஒலிபரப்பு உரிமக் கட்டணத்தைக் கோடீஸ்வரரும் தொழிலாளரும் சமநிலையில் இருந்து செலுத்துகின்றனர்.
வாட் வரி செலுத்தும் போது அதிகம் செலவழிப்பவர் அதிகம் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு இந்த வரியை வசூலிக்க பில்லாக் நிறுவனம் செலுத்தும் ஐம்பது மில்லியன் ஃபிராங்க் மிச்சமாகும். சுவிஸ் ஒலிபரப்பு நிறுவனத்துக்கான ஆண்டு வருமானத்தில் எழுபது சதவீதம் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது என்று மேயர்ஹான்ஸ் வாட் வரிவிதிப்பின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தார்.
இவை தவிர வேறு சில பிரச்னைகள் குறித்தும் மேயர்ஹான்ஸ் என்ற மான்சியர் ப்ரிக்ஸ் தெரிவித்தார். இப்போது தொலைதொடர்வுத் துறையில் அரசு நிறுவனமான சுவிஸ்.காம் மட்டுமே கோலோச்சி வருகிறது. இதற்கு போட்டி நிறுவனங்கள் இல்லை.
இதனால் அண்டை நாட்டாரை விட சுவிஸ் குடிமக்கள் தங்களின் இணையதளத் தொடர்புக்கு 68 சதவீதம் அதிகமாகப் பணம் செலுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து மேயர்ஹான்ஸ் தொலைதொடர்பு துறை அமைச்சரான டோரிஸ் லியுதார்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதற்குப் பதிலெழுதிய அமைச்சர் இதுகுறித்து இன்னும் ஐந்தாண்டுகளில் வேண்டிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார். ஆனால் மேயர்ஹான்சோ, இந்தப் பிரச்னை மிகவும் அவசரமாக முடிவெடுக்க வேண்டியது என தெரிவித்துள்ளார்.

ad

ad