புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012



சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களை செப். 4ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடப் போவதாக  விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்
கட்சி சாராத அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளித்து வருகிறது.
எதிர்ப்பு, கண்டனம் எழும்போதெல்லாம் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்தி பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதை இந்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் 2 சிங்களப் படை அதிகாரிகளுக்கு இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது.
இதனைக் கண்டித்து ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் அழுத்தமாகக் குரல் எழுப்பிவரும் நிலையிலும் இந்திய இராணுவத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு அவர்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, "சிங்களப் படையினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம். ஏனெனில் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு" என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த ஆணவம் மிகுந்த பேச்சு இனமானமுள்ள ஒவ்வொரு தமிழரையும் கடுமையாகக் காயப்படுத்துகிறது.
தமிழினத்தின் உணர்வுகளை அவமதித்து இழிவுபடுத்தியுள்ள அமைச்சரின் இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அமைச்சரைக் கண்டித்து ஆங்காங்கே விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 4ம் நாள் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறது.
இந்திய அரசு சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அறப்போராட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே நடைபெறுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது.

ad

ad