புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012

வீரப்பன் மனைவி உள்பட 11 பேர் விடுதலை
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு:

 வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேரை கோபி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
 
கன்னட சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்த ராஜ்குமார், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தனது தொட்டஹாஜனூரில் பண்ணைத் தோட்டத்தில் தங்கியிருந்தபோது 30.7.2001-ல் வீரப்பன் மற்றும் கூட்டாளிகளால் கடத்தப்பட்டார்.

 சத்தி மலைப்பகுதியில் 108 நாள்கள் பணயக்கைதியாக வைக்கப்பட்ட அவர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தின்போது பெரும்தொகை கைமாறியதாக சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் 11.11.2001-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு  மாற்றப்பட்டது.

 இவ்வழக்கில் வீரப்பனின் மனைவி உள்பட 26 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் 2 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இவ்வழக்கு ஈரோடு மாவட்டம் கோபி விரைவு நீதி்மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, அங்குள்ள மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீ்திமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

 இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடந்தபோது முத்துலட்சுமி உள்பட 24 பேர் நேரில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துலட்சுமி உள்பட 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மீதமுள்ள 13 பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஒவ்வொரு பேருக்கும் தலா ரூ.150 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

ad

ad