-

30 அக்., 2012

பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 40 பேர் காயம்
திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்று குடை சாய்ந்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
கெப்பத்திக்கொள்ளாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள இவ்விபத்தில் திருமண வைபவம் ஒன்றிற்காகச் சென்றவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். கெப்பத்திகொள்ளாவ – பதவிய பிரதான வீதியில் தம்மன்னாவ என்ற இடத்திலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
 
அதிகவேகம் மற்றும் கடும் மழைகாரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் கெப்பத்திக்கொள்ளாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad