புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012

அதிதாழமுக்கம் சூறாவளியாக இன்று இரவு வடப்பகுதி ஊடாக நகரும்: வா.அ.நி.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிதாழமுக்கமானது மேலும் தீவிரமடைந்து பலம் குறைந்த சூறாவளியாக உருவாகி இன்று இரவு வடபகுதி ஊடாக நகருமென வானிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
 

இதுகுறித்து அவர்மேலும் தெரிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிதாழமுக்கமானது முல்லைத்தீவுக்கு கிழக்காக 150 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து பலம் குறைந்த சூறாவளியாக உருவாகி இன்று இரவு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வதால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழையும் பலத்த காற்றும் காணப்படும்.

குறிப்பாக நாட்டைச்சுற்றியுள்ள கடற்பரப்பில் பலத்த காற்றும் மழையும் காணப்படுவதுடன் மன்னார்- திருகோணமலை வரையான அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையிலான கடல் பகுதிகளில் கடும் காற்றும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும். மேலும் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்களும் கடலில் பயணிப்போரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களில் கடும் காற்றுடன் மழையும் காணப்படலாம். மழைவீழ்ச்சியானது 100 மில்லி மீற்றருக்கு கூடுதலாகக் காணப்படுவதுடன் ஏனைய பிரதேசங்களில் விட்டுவிட்டு கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்

ad

ad