புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012


ஐ.நாவில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணையில் பா.ம.க பங்கேற்கும்: ராமதாஸ் அறிவிப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்தும் விசாரணையில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) பங்கேற்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் போருக்குப் பிறகும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கபட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிபீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஒக்டோபர் 22ம் திகதி தொடங்கி நவம்பர் 5ம் திகதி வரை நடைபெறும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கபட்டிருக்கிறது. இந்த விசாரணையின் போது இந்தியா நடுநிலையாக செயல்பட்டு இலங்கைக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன்.
இலங்கைக்கு எதிரான விசாரணையின் முதற்கட்டமாக நாளை மறுநாள் (ஒக்டோபர் 31ஆம் திகதி) நடைபெறும் விசாரணையில் மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளன.
அதைத் தொடர்ந்து நவம்பர் 1ம் திகதி இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி விசாரணை நடத்தபட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் திகதி அறிவிக்கபடவுள்ளன. என்னை நிறுவனராகக் கொண்டு செயல்படும் பசுமைத் தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கபட்டிருப்பதால், இந்த விசாரணையில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பிற்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் நடைபெறவுள்ள விசாரணையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பங்கேற்று இலங்கை மீது ஏன் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்? என்பதற்கான வாதங்களை முன்வைக்க உள்ளார். தொடர்ந்து நவம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணையில் ஜி.கே. மணியுடன் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருளும் கலந்து கொள்கிறார்.
பின்னர், இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் 9ஆம் தேதி வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்த விருக்கும் சர்வதேச மாநாட்டிலும் இந்த இருவரும் பங்கேகற்பார்கள்.
இந்த மாநாட்டிலும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும். இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
இலங்கை போரின் போது போர்க்குற்றங்கள் இழைக்கபட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருப்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது இந்தியா நடுநிலையுடன் செயல்பட்டு, இலங்கைக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad