புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012

நீதிபதி ஜெயின் அறிவிப்பு 
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மனு ஏற்பு - 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடந்தது. 2-வது நாளான நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே. ஜெயின் தலைமையில் நடைபெற்றது. 

தீர்ப்பாயத்தில் சாட்சியம் அளித்த கியூ பிரிவு இன்ஸ்பெக்டர்கள் திருச்சி ராஜீவ்காந்தி, விழுப்புரம் ராஜ்பாபு, சென்னை சாந்தன் ஆகியோரிடம் நீதிபதி ஜெயின் விசாரணை நடத்தினர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று விடுதலைபுலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவநேசன் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் தீர்ப்பாயத்தில் செய்த மனுவை ஏற்பதா? வேண்டாமா? என்று விசாரணை நடந்தது.

 அப்போது,  சிவநேசன் விடுதலைபுலிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவரது வக்கீல் ராதாகிருஷ்ணன் தான் விடுதலைபுலி உறுப்பினர் என்றும், ஆணையத்தை நாடுபவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், சிவநேசன் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்க மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதே போல இந்த தீர்ப்பாயமும் சிவநேசனின் மனுவை ஏற்க வேண்டும் என வாதிட்டார். பின்னர் நீதிபதி ஜெயின், சிவநேசனின் மனுவை ஏற்பதாக அறிவித்தார். இதுகுறித்து வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறுகையில் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்றார்.

ad

ad