புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து மூத்த மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை
மத்திய மந்திரி சபையில் பல்வேறு காரணங்களால் 14 மந்திரிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த மத்திய மந்திரிகள்
பலர் இரண்டு துறைகளை கூடுதலாக கவனித்து வருகிறார்கள். இதனால் மத்திய அரசு நிர்வாகப் பணிகள் விரைவாக நடைபெறுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 

மத்திய மந்திரி சபையை பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதமே மந்திரிசபை மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் சிலரை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியாகாந்தி விரும்பியதாலும், புதிதாக யார்-, யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பதிலும் இழுபறி ஏற்பட்டதால் கடந்த மாதம் மந்திரிசபை மாற்றம் நடைபெறவில்லை. 

இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முடிவு செய்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று மாலை அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மூத்த மந்திரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் எவ்வாறு மாற்றம் கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய மந்திரிகள் பற்றி விவாதித்து இறுதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மத்திய மந்திரிசபை மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad