ஐ.பி.எல். ஐதராபாத் அணியை வாங்கியுள்ளது சன் டிவி குழுமம்
ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கப்பட்டதையடுக்து ஹைதராபாத் அணியின் உரிமையை சன் டிவி
குழுமம் பெற்றுள்ளது.
ஆண்டொன்றுக்கு ரூ.85.5 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளது சன் டிவி குழுமம்.
இன்று ஒப்பந்த புள்ளிகளை ஐ.பி.எல். ஆட்சிக்குழு திறந்தபோது சன் டிவி குழுமம் அதிக தொகைக்கு அந்த அணியை கேட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் அணி ஒன்றிற்கு சன் டிவி குழுமம் உரிமையாளராகியுள்ளது.
பிவிபி வென்ச்சர்ஸ் நிறுவனம் ஆண்டொன்றுக்கு ரூ.69.03 கோடி ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 85.5 கோடி குறிப்பிட்டிருந்த சன் டிவி குழுமம் அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் உரிமை சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு டெண்டரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி குறிப்பிட்டிருந்த தொகையை விட சன் டிவி குழுமம் குறிப்பிட்டிருந்த தொகை அதிகம் என்று பி.சி.சி.ஐ. செயலர் சஞ்ஜய் ஜக்தாலே தெரிவித்துள்ளார்.