புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


அமீர் எனக்கு சரியான கெளரவத்தை கொடுக்கவில்லை என்று பாடலாசிரியர் சினேகன் விழா மேடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருஷங்களாக அமீர் எடுத்து வந்த ஆதிபகவன் படத்தின் பிரஸ்மீட் இன்று மாலை பிரசாத் லேப்பில் நடந்தது. பிரஸ்மீட்டில் படத்தின் புரொடியூசர், ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் அமீர், மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜா எல்லோரைப் பற்றியும், அவர்கள் செய்த
சாதனைகளைப் பற்றியும் சின்னதாக ஒரு குறிப்புப் படம் காட்டப்பட்டது.
ஆனால் அந்தப் படத்தில் பாடல் எழுதும் கவிஞர் சினேகனைப் பற்றி மட்டும் எந்த குறிப்புப் படமும் காட்டப்படவில்லை. இதுகுறித்து ஆதங்கப்பட்ட சினேகன் “ டைரக்டர் அமீர் எனக்கு தொடர்ந்து அவருடைய படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். ஆனால் என்னை அவர் ஒரு கவிஞனாக அங்கீகரிக்கவில்லை. அவர் அப்படி என்னை அங்கீகரிக்க வேண்டும். அதுதான் எனக்கு சந்தோஷம் என்று சொன்னார்.
இதற்கு பதில் சொன்ன அமீர், “ சினேகன் எதற்காக ஆதங்கப்பட்டார் என தெரியவில்லை. சினேகனை எனக்கு 13 வருடங்களாக தெரியும். அப்போதிலிருந்தே நான் அவரை கவிஞர் என்று தான் கூப்பிட்டு வருகிறேன். சினிமாவில் அவரை கவிஞர் என்று நான் மட்டும் தான் கூப்பிடுகிறேன். வேறு யாராவது அவரை அப்படி கூப்பிட்டிருப்பார்களா..? என்று தெரியவில்லை. இதைவிட அவருக்கு வேறு அங்கீகாரம் என்ன வேண்டும் என்று தெரியவில்லை.
அல்லது இங்கு எல்லோரைப்பற்றியும் விஷுவல் காட்டினோம், அதில் சினேகனைப் பற்றி காட்டவில்லை. அதனால் கோபித்திருக்கலாம், அல்லது அறிவுமதி அண்ணன் இந்தப் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்ற காரணமா..? என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் சினேகனுக்கு சொல்லிக் கொள்கிறேன். அறிவுமதி அண்ணன் எனக்கும் பாலாவுக்கும் விதை போட்டவர். இந்த சினிமாவுக்கு வழிகாட்டியவர் அவர்தான். அவர் மீண்டும் பாட்டெழுத வந்திருக்கிறார் என்று தெரிந்தபோது அவருக்கு நான் இந்தப் படத்தில் சான்ஸ் கொடுத்தேன். இனியும் அவருக்கு நான் தொடர்ந்து எனது எல்லாப் படங்களிலும் சான்ஸ் கொடுப்பேன் என்று முடித்தார்.
இதனால் சற்றே கலவரமான முகத்துடன் இருந்த சினேகன் பிரஸ்மீட் முடியும் வரை அமைதியாக இருந்தார். எப்போதுமே பிரஸ்மீட் முடிந்தவுடன் சுமார் ரெண்டுமணி நேரத்துக்கும் மேலாக அமீருடன் பேசிக்கொண்டிருக்கும் சினேகன் இந்த ப்ரஸ்மீட் முடிந்த அடுத்த நொடி விறுட்டென்று தனது காரை எடுத்து கிளம்பி விட்டார்.
இதிலிருந்தே அமீர்-சினேகன் கூட்டணி ஆதிபகவனோடு முடிந்து விட்டதாக சக பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

ad

ad