புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


அமெரிக்காவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளையதளபதியின் துப்பாக்கி

துப்பாக்கி தமிழ் தெலுங்கு படங்களின் அமெரிக்க விநியோகஸ்த உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளார்கள். இதுவரை வெளியான இளைய தளபதி விஜய்யின் படங்களில் துப்பாக்கி தான் அதிக விலைக்கு அமெரிக்காவில் வாங்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை இது வரை 17.5 இலட்சம் பேர் யுடுயூப்பில் பார்த்துள்ளார்கள். இது வரை வந்த விஜய்யின் படங்களிலேயே மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் அவரைக் காணலாம் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அட்மஸ் நிறுவனம் தற்பொழுது அமெரிக்காவில் வெளியாகும் அனைத்துப் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கும் ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது. அஜித்தின் பில்லா 2 மற்றும் சூர்யாவின் மாற்றான் படங்களை சமீபத்தில் வெளியிட்டார்கள். அதுவும் அவர்களின் படங்களிலயே அதிகமான திரைகளில் வெளியான படங்களாக அப் படங்கள் அமைய காராணமாக இருந்துள்ளார்கள் அட்மஸ் நிறுவனத்தார். தற்பொழுது விஜய்யின் துப்பாக்கியும் விஜய்யின் படங்களில் அதிகமான திரைகளில் வெளியான படமாக இருக்கும் என நிச்சயமாகக் கூறலாம்.
படங்களை உங்கள் இடங்களில் வெளியிட விருப்பம் இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் atmus1@gmail.com. அல்லது ராம் முத்து அவர்களை 214-533-6437 என்ற தொலைபேசி இலக்கத்திலும் சொக்ஸ் அருணாசலம் அவர்களை 972-342-5240 என்ற தொலைபேசி இலக்கத்திலும் தொடர்பு கொண்டு துப்பாக்கி திரைப்படத்தை உங்கள் இடத்தில் திரை இடுவது பற்றி அறிந்து கொள்ளலா

ad

ad