புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012

ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க வன்னி மாவட்ட விவசாய அமைப்புக்களுக்கு செல்வம் எம்.பி. அழைப்பு
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடனை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்த போதும் குறித்த செயற்பாடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளமையினால் உடனடியாக ஜனாதிபதிக்கு தந்தி மூலம்
கோரிக்கை விடுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வன்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டிருந்த கடும் வரட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரட்சி வன்னி மாவட்டத்திலும் ஏற்பட்டிருந்ததனால் இங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் வங்கிகளில் விவசாயக்கடனை பெற்றதோடு நகைகளையும் அடகு வைத்து தமது நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியினால் குறித்த வங்கிக்கடன்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும் அடகு வைத்த நகைகளை எதிர்வரும் காலபோகத்தில் நெற்பயிர்ச் செய்கையினை மேற்கொண்டதன்பின் நகைகளை திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் வன்னி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வங்கிக்கடனகள்; இது வரை இரத்துச் செய்யப்படவில்லை.

இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே, வன்னி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய அமைப்புக்களும் விவசாயிகளின்
நலனை கருத்தில் கொண்டு குறித்த வாக்குறுதிகளை உடன் அமுல் படுத்தக்கோரி ஜனாதிபதிக்கு தந்தி மூலம் கோரிக்கை விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad