வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா
செய்யும் வரலாற்று சாதனையைக் கடந்த 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜெயக்குமார் அமைதியாக செய்து முடித்தார்.
அக்டோபர் 30-ஆம் தேதி நடக்கும் வைரவிழா கொண்டாட்டத்திற்கு 31 நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைக்கான அர சியல் சடுகுடு விளையாட்டுகள் 22-ஆம் தேதி நக்கீரன் இதழ் வெளிவந்த வுடனேயே தொடங்கப்பட்டது.
நாம் அந்த இதழில் "அடுத்தது அண்ணன்தான்! சவால்விடும் சபாநாயகர் குரூப்!' என்ற தலைப்பில், "விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜெயக்குமார், கோட்டையை ஆளும் வகையில் முதல்வராகும் யோகம் இருக்குன்னு ஜெ.வின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த உன்னிகிருஷ்ண பணிக்கரே சொல்லியிருக்கிறாராம். அதனால் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும். மந்திரிகளா இருந்தாலும் ஜெ.வை நேரில் சந்தித்து திரும்புவதைத் தவிர வேறெந்த கொண்டாட்டமும் இருக்கக்கூடாது என்பதை மீறி, ஜெயக் குமார் தன்னோட பிறந்தநாளை எந்தப் பக்கம் திரும்பினாலும் போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள், சீனியர், ஜூனியர் மந்திரிகள் வாழ்த்து, கட்டாய மிரட்டல் வசூலித்து, அண்ணன் முதல்வரா பதவியேற்கிற ஆண்டாக நினைத்து ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கொண்டாடுனாங்க' என்று அட் டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
"ஐயோ அப்படிப்பட்டவரா?' என ஜெ.வை கோபமுற வைத்த அந்தச் சம்பவம் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது நடந்தது. அரசியல் காரணங்களால் அவர் நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்' திரைப் படத்தை திரையிட சென்னையில் எந்தத் தியேட்டர் அதிபரும் தயாராக இல்லை. எம்.ஜி.ஆர்., ஈரோடு மாவட்டத்தில் பெரியார் தொண்டராக இருந்த பணக்கார ருக்கு நெருக்கமான தேவி பாரடைஸ் தியேட்டரில் திரையிட பொன்னையன், ஆர்.எம்.வீ. மூலம் பேசி ஏற்பாடு செய்தார்.
""அந்தத் திரைப்படம் திரையிடப்பட் டால் நாங்கள் தடை செய்வோம்'' என அப்போதைய பலம் வாய்ந்த தி.மு.க.வின் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீத்தாபதி அறிவித்தார். தி.மு.க.வின் தாக்குதலைச் சந்திக்க வண்ணை மு.பாண்டியன், மதுசூதனன் தலை மையில் ஆயிரம் அ.தி.மு.க.வினர் தேவி பாரடைஸ் தியேட்டர் முன்பு அணி வகுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். அ.தி. மு.க.வினரின் அணிவகுப்பை உடைத்துக் கொண்டு ராயபுரம் தி.மு.க. கவுன்சிலர் துரைராஜ் தலைமையில் வந்த மீனவர்கள் படை, தியேட்டருக்குள் புகுந்தது. அப் போது ஏற்பட்ட மோதலில் அந்த படத்திற்காக வைத்திருந்த.