புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்: சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசனினால் எழுதப்பட்ட 'ஸ்டில் கவுன்டிங் தி டெட்' என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, சட்டவிரோத ஆள் கடத்தல், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பிரதிநிதி யாஸ்மீன் சூகா மற்றும் சர்வதேச அனர்த்தக் குழுவின் பிரதிநிதி அலன் கீனன் ஆகியோரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad