புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012



இன்று காலை பொன்முடி வந்தார். அப்போது கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வானூர் அருகே பூத்துறையில் குவாரியில் அனுமதித்த அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும்
அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் செஞ்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக தலைமைக் கழக அறிவிப்புபடி இன்று (06.10.2012) காலை துண்டு பிரசுரங்ளை வினியோகித்தார். பின்னர் செஞ்சியில் இருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலத்திற்கு இன்று காலை பொன்முடி வந்தார். அப்போது கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

ad

ad