புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


1000 கோடி ஊழல் புகார் : உரத்துறை அமைச்சகம் விளக்கம் 
உரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டி ருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று உரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.





இதுதொடர்பாக உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறி க்கையில், மத்திய உரத் துறை அமைச் சகத்தின் மூலம் அளிக் கப்படும் மானியங்கள் சரியான முறையில் விவசா யிகளை சென்றடைய உரத்துறை அமைச்சகம் நடவடி க்கை எடுத்து வருகிறது.

சர்வதேச விலை, விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு உரத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மானியம் மற்றும் உர விலை போன்ற உரத்துறை எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெளிப்படையாகவே நடைபெறுகிறது.
உர நிறுவனங்கள் முறைகேடாக வருமானம் பெற அனுமதிப் பதில்லை. உர நிறுவனங்களின் வரவு செலவு பதிவேடுகளை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். உர விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad