புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013

 நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.
பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. 


கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் வெளியான படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் எவ்வித சச்சரவும் இல்லை. ஐதராபாத் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். பயங்கரவாதம், காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

விரைவில் வெளிவர துணை:

தமிழகத்தில் படம் திரையிடப்படவில்லை. கமல் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தடை குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.

இந்தப்படம் தணிக்கையான பின்னர் வெளியிடுவதற்கு முன்பாகவே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு திரைப்படம் காண்பித்துள்ளார். இதிலிருந்தே இஸ்லாமிய மக்களின் மீது கமல் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

ad

ad