புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


ஜெனிவா மாநாட்டை இலக்காகக் கொண்டதே இராணுவ விசாரணை அறிக்கை!- மூத்த செய்தியாளர்
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஜெனிவா மாநாட்டை மனதில் வைத்து இன்று இராணுவ விசாரணை அறிக்கை வந்திருப்பதாக இலங்கையின் மூத்த செய்தியாளரான அனந்த் பாலகிட்ணர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த அறிக்கை பற்றி பல தரப்பினரிடம் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வந்திருக்கின்றன.
இராணுவத்தின் உள்ளக விசாரணை அறிக்கையை மாத்திரம் வைத்து இலங்கைப் போரின் இறுதிக் கட்ட இழப்புகள் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும், இந்த அறிக்கையை மாத்திரம் வைத்து போரின் ஏற்பட்ட முழுமையான அழிவுகள் குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஜெனிவா மாநாட்டில் சர்வதேச நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டிருந்தன. அவற்றை முற்றாக மறுக்கும் பட்சத்திலேயே இந்த அறிக்கை அமைந்துள்ளது.
இழப்புகள் குறித்து உண்மையானது என்று இந்த ஒருதலைப்பட்சமான அறிக்கையை வைத்துக்கொண்டு நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு நடுநிலையான விசாரணைகள் மூலம் தான் அங்கு நிகழ்ந்த உண்மையான இழப்புகளை அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள காலப்பகுதியை நோக்கினால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை மையமாகக்கொண்டே வெளியிடப்பட்டுள்ளது என நம்பகரமாகக் கூறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அறிக்கைகள் எப்போதுமே ஒரு தரப்பு கருத்தாக மாத்திரமே இருக்கின்றது என்றும், பலதரப்பட்ட இராணுவ ரீதியான விடயங்களை மட்டும் தாங்கியுள்ளவையாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவத்துக்கு மும்மொழி கற்பிக்கும் திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார்.
இறுதிப்போரில் இராணுவம் தமக்கு சர்வதேச போர்ச் சட்டங்கள் தமக்கு எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை அனுபவவாயிலாக அறிந்துகொண்டுதான் உள்நாட்டுப் போருக்கான சட்டங்கள் வகுக்கவேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றார்.

ad

ad