புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


அமெரிக்காவில் 1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி அம்பலம்
அமெரிக்காவின் நியூயார்க் பகுதி அட்டார்னி ஜெனரல் பால் பிஷ்மேன் கூறியதாவது:
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலி பெயர்களில் கிரெடிட் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 7 ஆயிரம் போலி ஆவணங்கள்
மூலம் 25 ஆயிரத்துக்கும் மேல் கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளனர். கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்காக அவர்கள் 1,800க்கும் மேற்பட்ட இமெயில் முகவரிகளை ஏற்படுத்தியுள்ளனர். நிறுவனங்களில் வழங்கப்படும் பில்களைப் போலவே போலியாக தயாரித்துள்ளனர்.

கிரெடிட் கார்டுகளில் முதலில் குறைந்த அளவு கடனே வழங்கப்படும். எனவே முதலில் சிறிய தொகைக்கு பொருட்களை வாங்கிவிட்டு அதை சரியாக கட்டிவிடுவர். சரியாக பணத்தை கட்டுபவர்களுக்கு சிறிது காலத்தில் கடன் அளவு உயர்த்தப்படும்.

இதை கண்காணிக்கும் பிரிவுகளில் இவர்களின் ஆட்கள் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுதாரர் சரியாக பணம் செலுத்துவதால் கடன் அளவை உயர்த்தலாம் என்று பரிந்துரை அனுப்புவார். அதன்படி கடன் அளவு அதிகரிக்கப்பட்டதும் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள், கார்கள், தங்க நகைகள் என பல்வேறு பொருட்களை வாங்குவர். பெரும் தொகையை ரொக்கமாகவும் எடுத்துவிட்டு பணத்தை திரும்ப கட்டாமல் விட்டுவிடுவர்.

கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குபவர்கள் அமெரிக்கா மட்டுமின்றி பாகிஸ்தான், இந்தியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், கனடா, ருமேனியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 28 நாடுகளில் இருந்து செயல்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்ட 80 தொழில்களைக் கூட இவர்கள் போலியாக நடத்தியுள்ளனர். நியூஜெர்சி நகரில் இந்தியர்கள் நடத்தும் 3 நகைக்கடைகள் மூடப் பட்டு கிடக்கின்றன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது ஒருவர் வீட்டில் இருந்த அவனில்`36 லட்சம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வேலைக்கே செல்லாத ஒருவர் தனது வங்கிக் கணக்கில் 7.95 கோடி வைத்துள்ளார்.
மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ள இந்த மோசடி தொடர்பாக 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிஷ்மேன் கூறினார்.

ad

ad