புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணத்தைக் கண்டித்து போராட்டம்: ரயில்மறியல், உருவ பொம்மை எரிப்ப
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நாளை இந்தியா திருப்பதிக்கும் பீகாருக்கும் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைக் கண்டித்து கோவையில் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா. சபையாலேயே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல், ராஜபக்‌ஷவின் வருகையைக் கண்டித்து, செங்கல்பட்டில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை சென்று கொண்டிருந்த சோழன் விரைவுவண்டியை மறித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதே போல் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜபக்‌ஷவின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வப்போது இலங்கை அதிபருக்கு வரவேற்பை அளிக்கும் மத்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பழங்குடி தமிழர் இயக்கம் சார்பில் இலங்கை அதிபரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக முழங்கங்களும் எழுப்பப்பட்டன.

ad

ad