புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


விஸ்வரூபமாக மாறும் தமிழர் பிரச்சினை - தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்
சர்ச்சைக்குரிய விஸ்பரூப திரைப்படத்தினை இன விரிசல் ஏற்படாத வகையில், கெளரவ தமிழக முதலமைச்சரினால் தீர்த்து வைக்க முடிந்துள்ளது.
இதேபோன்று, விஸ்வரூபமாக இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் கௌரவ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தலையிட்டால் ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவாகக் கருதும் தமிழகம், இதுவரை தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிந்து செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
இந்நிலை தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், இனி இலங்கைத் தமிழர்கள் படுவதற்கு எந்த துன்பங்களும் இல்லை என்ற நிலையில் நிச்சயமாக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை சரிவரப் புரிந்து, எம்மையும் தமிழகத்தின் தொப்புள் கொடி என்ற ரீதியில் ஒரு நிரந்தர நியாயத்தை, தீர்ப்பை வழங்க வழிகோலுவார் என்ற நம்பிக்கை இன்றும் இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் இருக்கிறது என்றால் அதை மறுக்க முடியாது.
எனவே, எமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம் என்பதை அம்மா அவர்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளார்.
எனவே, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அன்புடனும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக சண். குகவரதன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   

ad

ad