புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013



எம்எல்ஏ மீது தாக்குதல்:
தமிழக சட்டசபைக்குள் பரபரப்பு
தமிழக சட்டசபைக்குள் ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனை சூழ்ந்து கொண்டு தேமுதிக எம்எல்ஏக்கள் தாக்கினர். இதனால் சட்டசபைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. 



தேமுதிக எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் ராயப்பன், தமிழழகன் உள்ளிட்ட 4 பேர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தித்தனர். ஜெயலலிதாவை சந்தித்தது முதல் அதிமுகவுக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 
ஜெயலலிதாவை சந்தித்தது முதல் தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நன்றாக இருப்பதாகவும், ஆகவே இதனை மற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழழகன் பேசினார். தமிழழகன் பேச்சுக்கு மைக்கேல் ராயப்பனும் ஆதரவு தெரிவித்தார். 
அப்போது தமிழழகனை தாக்க வந்தபோது, மைக்கேல் ராயப்பன் தடுக்க வந்துள்ளார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் சபாநாயகர் உத்தரவையடுத்து தேமுதிக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்,

ad

ad