புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


கையை இழந்த மாணவிக்கு சிறைச்சாலை கைதிகள் பண உதவி

வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவிக்கு பிரியதர்ஷினிக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது பகல், இரவு உணவினை தவிர்த்து 2 இலட்

 
சத்து 37 ஆயிரம் ரூபா பணத்தை உதவியாக வழங்கியுள்ளனர்virakesari


கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் அஞ்சலா பிரியதர்ஷினி என்ற குறித்த மாணவி தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வைத்தியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினாலேயே மாணவிக்கு கை அகற்றப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்தது. மாத்தறை வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக மாணவி தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்களுக்கு அவரது கையை அகற்றுவதை தவிர வேறு வழியில்லை என தீர்மானித்ததாக அவ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவிக்கு பல உதவிகள் கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad