புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


: "ராஜபக்சே வின், இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவேன் என, அறிக்கை வெளியிட்டால், நான், தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்' என, வைகோ கூறினார். 
ம.தி.மு.க., வின், 21வது பொதுக்குழு, சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன்,
நாசரேத் துரை, பொருளாளர் மாசிலாமணி, எம்.பி., கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுக்குழுவில்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக, மத்திய அரசு அறிவிக்க, உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றாத அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம். மாநில அரசுகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்ற, "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற மோசடி திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் விநியோகத்திற்கான கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பிரதமர் இல்லத்தை முற்றுகை :

தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி:தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, இம்மாதம், 18ம்தேதி மறைமலைநகரில் துவங்கி, கோவளம் வரை பிரச்சார நடைப் பயணம் நடத்தப்படும். ராஜபக்சே வின் வருகையை கண்டித்து, என் தலைமையில், டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும், திருப்பூர் துரைசாமி தலைமையில், திருப்பதியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும். இலங்கை அதிபர் ராஜபக்சே, மத்திய அரசின் அனுமதியோடு தான் இந்தியா வருகிறார்.

எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட வேண்டும். அவ்வாறு அறிக்கை வெளியிட்டால், நான் தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன். வரும், லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.


ad

ad