புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


நடிகை எஸ்.பானுமதிக்கு இன்று இறுதி சடங்கு
மஞ்சள் காமாலை நோய் காரணமாக நடிகை எம்.பானுமதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. தில்லானா மோகனாம்பாள், திருநீலகண்டர், வியட்நாம் வீடு, காதல் ஜோதி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், எம்.பானுமதி. திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத்தாமரை ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருந்தார். இவர் கடந்த ஒரு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டார். திங்கள்கிழமை அவருடைய உடல்நிலை மோச


      
மானது. உடனடியாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், பிற்பகல் 2–50 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு, லட்சுமி என்ற ஒரு மகள் மட்டும் இருக்கிறார். எம்.பானுமதியின் இறுதி சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடக்கிறது.

ad

ad