புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


"இந்தியாவிற்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ சார்பில் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில், 18ம்தேதி, நாகப்பட்டினத்தில், 19ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பொது வாக்கெடுப்பு சம்மந்தமான தீர்மானத்தை, நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின், இந்திய வருகையைக் கண்டித்து, இம்மாதம், 8ம்தேதி, சென்னையில் கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், டெசோ உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இலங்கையில் தமிழர்கள் படுகின்ற அவலங்களையும் விளக்கும் வகையில், டில்லியில் மார்ச் மாதத்தில், அனைத்திந்திய அளவில், அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து, கருத்தரங்கம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்த பின், கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நாங்கள் ஏற்கவில்லை :

இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை அரசு தொடர்ந்து செயல்படுமானால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இந்தியாவில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என, ஏ.கே.அந்தோணி கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள், இலங்கை தமிழர்களை படுகொலை செய்ததையும், அந்த இனபடுகொலை தொடர்வதும் பொறுத்துக் கொள்ள முடியாத நிகழ்வுகள். நாங்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை ஏற்காமல், தயக்கம் காட்டினால், டெசோ சார்பில், தொடர் போராட்டம் நடத்தப்படும்.

41 நாடுகளின் தூதர்கள் : டெசோ உறுப்பினர்கள் பாகிஸ்தான், சீனா நாடுகளின் தூதர்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. தனி ஈழம் வேண்டும் என, டெசோ கருதுகிறது. டில்லியில் நடத்தும் கருத்தரங்கத்திற்கு, இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அக்கறையுள்ள எல்லா கட்சிகளையும் அழைப்போம். தி.மு.க., எம்.பி., க்கள், ஏழு குழுவினராக சென்று, 41 நாடுகளின் தூதர்களை சந்தித்து, தீர்மானங்களை வழங்குவர். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ad

ad