புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த நாளை விஜயம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அங்கு விஞ்ஞான பீடத்தின் உயிரியல் துறைக் கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கிறார்.
உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வின் போது, 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உயிரியல் துறைக் கட்டடத்தினைத் திறந்து வைப்பதுடன், பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
திறப்பு விழாவினைத் தொடர்ந்து புதிதான மீளமைப்புச் செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லையா ஞாபகார்த்த மண்டபம் 10 மில்லியன் ரூபாய் செலவில் மீளமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சுற்றுமதில், பல்கலைக்கழகத்தின் வீதிகள் காபெட் போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் கிழக்குப் பல்கலைக்கழக விஜயத்தினை ஒட்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலில், கிழக்கு பல்லைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்குப் பல்லைக்கழக பதிவாளர் எம்.மகேசன், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ad

ad