புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013




         பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை  கஸ்டடி எடுத்து ஆறு நாட்கள் விசாரித்ததில் கிறுகிறுத்துப் போய் விட்டார்கள் மதுரை காக்கிகள். அவர்கள் விசாரித்த விதமும் அந்த ஏழு பேர் அளித்த வாக்குமூலமும் கொலை செய்யத் தூண்டியவர்களை அடையாளம் காட்டியிருக்கின்றன. நக்கீரன் 

""அய்யா.. அவன் கூப்பிட்டான்.. நான் போனேன்.. வெட்டச் சொன்னான்.. வெட்டுனேன்.. சத்தியமா வேற ஒண்ணும் தெரியாது..''’

-சந்தானம் நீங்கலாக விசாரணை கைதிகள் 5 பேரும் சபாரத்தினத்தை கை காட்டியிருக்கிறார்கள்.  
சபாரத்தினமும் சந்தானமும் “""ஆமாங்கய்யா.. அட்டாக் பாண்டி அக்கா மகன் விஜயபாண்டி சொல்லித் தான் கொலை செஞ்சோம்.. இதுக்கு மேல சொல்லுற துக்கு எங்ககிட்ட விஷயமில்லீங்கய்யா..'' என்றிருக்கிறார்கள். 

-விசாரணையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல  முடியாதவாறு, கீறல் விழுந்த ரெக்கார்டு போல இந்த ஏழு பேரும் இப்படி சொன்னதையே  சொல்லிக் கொண்டி ருக்க.. நொந்து போனார்கள் அதிகாரிகள். 


தனித்தனியாக விசாரித்த போது, இந்த விசாரணைக் கைதிகளில் ஓரிருவர்  உண்மை பேசியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் மழுப்ப லாக பொய் மட்டுமே பேசியவர்களிடம், "உன்ன மாதிரி இல்ல.. அவன் ரொம்ப நல்லவன்.. எல்லாத்தயும் சொல்லிட்டான்..' என  போட்டு வாங்கிய காக்கிகள், அவர்கள் பயன்படுத்திய ஒன்றுக்கு மேற்பட்ட செல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளைக் கைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். விசாரணையில் ஓரளவுக்காவது வேகம் காட்ட முடிந்த தென்றால், அதற்கு காரணம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம்தான்.  ஹெட்- செட்டை  மாட்டியபடியே விசாரணை நடை பெற்ற  சுப்பிரமணியபுரம் காவல்நிலையத் துக்கு வரும் இவர், "இந்த செல்போன்ல இருந்து இந்தத் தேதில  இத்தனை மணிக்கு இவன் இன்னார்கிட்ட பேசியிருக்கான்..' என்று ஏழு பேரும் பேசிய நேரத்தைக் கொட்டியபடியே இருந்திருக்கிறார்.  யார் யாரிடம் பேசினார்கள் என்ற நீளமான பட்டியல் காக்கிகளை தலை சுற்ற வைத்திருக்கிறது. ஆனாலும், எந்தக் கட்டத்திலும் விஜயபாண்டியைத் தாண்டி எதுவும் கறக்க முடியவில்லை காக்கிகளால். பொட்டுவின் பினாமி என்று சொல்லப்படும் பாலதம்புராஜ் போன்றவர்களும் கூட விசாரணை வளையத் துக்குள் வந்து போயிருக்கிறார்கள். 

விசாரணையின் போது  வழக்கமான நடைமுறையைக் கையாளாமல் சாத்வீகமாக அணுகியதால்,  அட்டாக் பாண்டி மற்றும் விஜயபாண்டியோடு தினகரன் தீ வைப்பு வழக்கில் அப்போது கைதான அட்டாக்கின் இன்னொரு அக்கா மகன் திருச்செல்வத்தின் பெயரையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.  ஆனாலும், இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர் திருச்செல்வம் என்பதை தொடர்ந்து நடந்த விசாரணையில் தெரிந்து கொண்டார்கள் காக்கிகள். மொத்த டீமையும் முன்னின்று நடத்தியவன் சபாரத்தினம் என்பதும் அட்டாக் வீடே கதியெனக் கிடந்த சந்தானம் அவனுக்கு அடுத்த இடத்தில் இருந்து செயல்பட்டதும் மற்ற ஐந்து பேரும் அளித்த வாக்குமூலத்தில் வெளிப்பட்டிருக்கிறது.


இந்த ஏழு பேரும் பொட்டு கொலையான நாளில் செல்போன் மூலம் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என  ‘ட்ரேஸ்’ செய்த போது, சம்பந்தமில்லாத ஒரு நம்பருக்கு இவர்கள் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அது யாருடைய நம்பர் எனத் துருவிய போது அந்த நபரின் பெயர் பிரேமாக இருக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.  பிரேம் நம்பரிலிருந்து ஜோதி, பிரபு என இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட வேறு சிலருக்கு அழைப்பு போனதையும் கால் விபரங்கள் காட்டிக் கொடுத்திருக்கின்றன. ஜோதி மற்றும் பிரபுவின் செல் நம் பர்கள்தான்  விஜய பாண்டியின் நம்ப ரோடு அடிக்கடி தொ டர்பில் இருந்திருக் கின்றன. பிரவீன் போன்ற வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருப்ப தால், அட்டாக் பாண்டி, விஜயபாண்டி யோடு இன்னும் ஏழெட்டு பேரை இந்த வழக்குக்காக  தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது காவல்துறை. 

காவல்நிலையத்துக்கு சொந்த பந்தங்களை அள்ளிக் கொண்டு வந்து  ஏழு பேரையும் சரணடைய வைத்தது போலவே, மாமன் (அட்டாக் பாண்டி) சொல்லைத் தட்டாத மருமகன் எனப்படும் விஜயபாண்டியைப் பிடிப்ப தற்காக, அவனது அம்மா பஞ்சவர் ணத்தை (அட்டாக் பாண்டியின் அக்கா)  விசாரணைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். விஜயபாண்டியின் வளர்ப்புத் தாயான இவர் "எனக்கு ஒண்ணும் தெரியாது.. என்னை வீட்ல கொண்டு போயி விட்ருங்க..' என்று கூப்பாடு போட்டபடியே இருக்கிறார். 

சரி.. யார் இந்த விஜயபாண்டி?

விருதுநகர் மாவட்டம் - பரளச்சி அருகிலுள்ள கள்ளக்காரிதான் விஜய பாண்டியின் சொந்த ஊர். இவரது அப்பா பெயர் சக்கரைத் தேவர். அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய சைக்கிள்-ஸ்டாண்ட், மதுக் கடை பார், மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்திருக்கிறார். அட்டாக் பாண்டியைக் காட்டிலும் வசதியான குடும்பப் பின்னணி உள்ள விஜயபாண்டி ஒரு பட்டதாரியும் கூட. 2010-ல் சென்னையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு வந்த ஆம்னி பஸ் மூலம் கள்ளத் துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள், புல்லட்கள் கடத்திய தாக அட்டாக் பாண்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேறு இருவர் அப்போது கைது செய்யப்பட்டாலும் இந்தக் கடத்தலின் பின்னணியில் இருந்தது விஜயபாண்டிதான் என்கி றார்கள் அந்த ஏரியா காக்கிகள். சினிமா தயாரிப்பாளரும் டைரக்டர் மணிரத்னத்தின் அண்ணனுமான ஜி.வி தற்கொலைக்கு காரண மானவர் என்று அப்போது சர்ச்சைக்குரியவராக பேசப்பட்ட   சினிமா வினியோகஸ்தர் அன்புச் செழியனின் அண்ணன் மகளைத்தான் மணம் முடித்திருக்கிறார் விஜயபாண்டி.  இந்தத் திரு மணமும் மு.க.அழகிரியின் தலைமையில்தான் நடந்திருக்கிறது. 

பொட்டு சுரேஷ்பாபுவை  திட்டமிட்டு கொன்றது எப்படி?

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தங்கம் தியேட்டருக்கு அடுத்துள்ள தி கோல்டன் பார்க் என்ற சொகுசு விடுதியின் அறை எண்கள் 201 மற்றும் 202-ல்தான் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. நாம் அந்த விடுதியின் கணக்காளர் சுப்பையாவை சந்தித்தோம் “""போலீஸ் காரங்க கேட்ட அத்தனை விபரத்தையும் சொல்லிட்டோம்.. இங்கே வீடியோ கேமராவுல அவங்க பதிவாயிருந்ததையும் கொடுத்துட்டோம்.. இங்கே நாள் ஒண்ணுக்கு ஒரு ரூமோட வாடகை 1500 ரூபாய்.    12-ந் தேதி மோகன்ராஜ்ங்கிறவர் பேருல ரூம் நம்பர் 201-ஐயும், 15-ம் தேதி பிரபுங்கிற பேருல ரூம் நம்பர் 202-ஐயும் புக் பண்ணுனாங்க.. ஒரு ரூம்ல மூணு பேரும் இன்னொரு ரூம்ல ரெண்டு பேருமா தங்கியிருந்தாங்க.. அப்புறம் வேற யார் யாரு வந்துட்டுப் போனாங்கன்னு எனக்குத் தெரியாது.. இந்த ரெண்டு ரூமையும் 31-ந் தேதி (இதே நாளில் பொட்டு சுரேஷ் கொலையான நேரம் இரவு மணி 7-40) ராத்திரி  9 மணிக்கு மேலதான் காலி பண்ணுனாங்க..'' என்றார்.   

கொலை நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே கொலைக்கான ஸ்கெட்ச் போட ஆரம் பித்து, பொட்டு சுரேஷை பின் தொடர்ந்திருக் கிறார்கள். ஆனாலும், சரியான சந்தர்ப்பம் வாய்க் காமல்  ஒவ்வொரு நாளாக தள்ளிப் போயிருக்கிறது. கொடைக்கானலில் ரிலாக்ஸ் செய்து விட்டு,  31-ந் தேதி மதுரை திரும்பிய பொட்டு சுரேஷ் சத்யசாய் நகரில் உள்ள  அவரது வீட்டுக்கும் பொறி யாளர் நகரிலுள்ள அலுவலகத் துக்கும் சென்று திரும்பிய போது, ஒரு பைக்கில் ஜோதியும், பிரேமும் இன்னொரு பைக்கில் வேறு இருவரும்  பின் தொடர்ந்திருக்கிறார்கள்.  டூ வீலர்களில் நோட்டமிட்ட இந்த நால்வரும்தான்,  கொலை செய் வதற்கு டாடா ஏஸ் வாகனத் தில்  வந்தவர்களுக்கு  பொட்டுவின் மூவ்மென்ட்ஸை  ‘பாஸ்’ செய்தபடியே இருந்திருக்கின்றனர். மிகச் சரியான இடமாக சத்யசாய் நகர் அமைய, தாங்கள் வந்த  ஒரு டூ வீலரை பொட்டுவின் ஸ்கோடா காரில் மோதவிட்டிருக் கிறார்கள். அவர் கார் கண்ணாடியை இறக்கி, காருக்கு ஏற்பட்ட சேதத்தை  எட்டிப் பார்த்திருக்கிறார். அந்த நொடியே காரில் அமர்ந்திருந்த அவர் கழுத்தில் முதல் வெட்டு விழுந்திருக்கிறது. உடனே, அவர்  கார்க் கதவைத் திறந்து “"அய்யோ..' என்று  அலறியடித்து ஓட, "விட்றாதீங்கடா.. பொழச்சிக்கக் கூடாது.. சாவடிக் கணும்..' என்று கட்டளைகள் பறக்க.. பொட்டு சுரே ஷின் உடலில் மாறி மாறி அரிவாள் வெட்டுக்களும், கத்திக் குத்துக்களும் விழுந்து அந்த இடத்திலேயே அவரைச் சாய்த்திருக்கிறது. உயிரும் போயிருக்கிறது. 

“20 நாட்களாக கொலையாளிகள் தங்கியிருந்த விடுதி வாடகையே அறுபதாயிரத்துக்கும் மேலா கிறது.  மது அருந்தியது, சாப்பிட்டது  என மொத்த டீமும் செலவழித்த தொகை நிச்சயம் ஒரு லட் சத்தைத் தாண்டியிருக்கும். "தலைநகரத்துக்காகத்தான் கொலை செய்தோம்..' என்று இந்த டீம் சொன் னாலும், பெரிய அளவில் டீலிங் நடந்திருக்கிறது. கீரைத்துறை ஏரியாவில் தாங்கள்  ஏவிவிடும் அம்பு களாக சில நூறு பேரை  அட்டாக் பாண்டியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு வளர்த்து விட்டிருக்கின்ற னர். கல்யாணம், காது குத்து, கபடி போட்டி என அந்த ஏரியாவில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் ரூ.50,000 வரை அள்ளிக் கொடுப்பவனாக இருக் கிறான் விஜயபாண்டி. இதற்கான ஏற்பாடுகளைச் செய்பவனாக இருந்திருக்கிறான் சபாரத்தினம். இப்படி ஒரு கொலையில் ஒருக்காலும் தானாக இறங்க மாட்டான் விஜயபாண்டி. அட்டாக் பாண்டி நினைத்ததை முடிப்பவனாக இருக்கும் விஜயபாண்டி யும் சரி.. அட்டாக் பாண்டியும் சரி.. கொலையைச் செய்துவிட்டு லாவகமாகத் தப்பி விடுவதில் கை தேர்ந் தவர்கள். அதனால்தான், தலைமறைவாகி காவல் துறைக்கு  போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். விஜயபாண்டி சிக்கும் போதுதான்,  நிச்சயம் ஏவியவனைக் கை காட்டுவான். சீக்கிரமே சிக்குவார்கள் பாருங்களேன்..’’ அடித்துச் சொல்கிறது காக்கிகள் வட்டாரம். 

""மாமதுரை போற்றுவோம்’ என ஒரு புறம் கொண்டாட்டம் நடந்தாலும், “கொலைகாரப் பய ஊரா மாறிக்கிட்டிருக்கே..''’ என்று திகிலடித்துப் போய் சொல்கிறார்கள் மதுரைவாசிகள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள் : அண்ணல், ஷாகுல்

ad

ad