புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013


அமெரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையை செய்தாரா?- மன்மோகன் சிங்கின் மகள் கேள்வி
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் சித்திரவதை நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னாள் பிரதம மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் உடன்படிக்கையை செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் இளைய மகளான அம்ரிட் சிங், அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள திறந்த சமூக நிதியத்தின் ஊடாக கடந்த 5 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்கு இலங்கை அரசாங்கம் பதில்கூற வேண்டும் என்று அம்ரிட்சிங் கோரியுள்ளார்.
2001- 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் போது சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்தல், மற்றும் தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இலங்கை, அமெரிக்காவுக்கு விமான தள வசதிகளை செய்து கொடுத்தது.
இதன்படி, அமரிக்கா விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளத்தில் தரித்துசெல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்தநிலையில் குறித்த அமெரிக்க புலனாய்வுத் திட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், அமெரிக்காவுடன் உடன்படிக்கையை கொண்டிருந்ததாக என்று அம்ரிட்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைமுறை அரசாங்கம் ஒன்று நாடு என்ற வகையில் முன்னர் இருந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றன
அந்த வகையில் தற்போதைய இலங்கை அரசாங்கம் இதற்கு பதில்வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் சட்டத்தரணியாக இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad